“தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனி எந்த கட்டணமும் இல்லை”…, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0
"தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனி எந்த கட்டணமும் இல்லை"..., சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில், இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், எதிர்வரும் கல்வியாண்டுக்கு தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்காக பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போவது வரையிலும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், இந்த இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களை மையமாக வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அடக்கொடுமையே.., இது என்னடா சந்திரமுகி படத்துக்கு வந்த சோதனை.., சீரியல இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா!!

அதாவது, இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, சீருடை மற்றும் புத்தக கட்டணங்களை அரசே வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்பட கூடாது எனவும், இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை மாநில அரசிடமே கேட்க வேண்டும் எனவும், இது குறித்த அறிவுறுத்தல்களை 2 வாரத்தில் அதிகாரிகளுக்கு பிறக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here