அடேங்கப்பா.., தி கேரளா ஸ்டோரி வசூல் இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
அடேங்கப்பா.., தி கேரளா ஸ்டோரி வசூல் இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!
அடேங்கப்பா.., தி கேரளா ஸ்டோரி வசூல் இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் தி கேரள ஸ்டோரி. இப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதற்கு காரணம் படத்தோட கதைக்களம் தான்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை வெளியிட எந்த மாநிலமும் முன்வரவில்லை. மேலும் இப்படம் திரையிட கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு ஷோ மட்டுமே திரையிடப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட சர்ச்சையால் படத்தை தியேட்டரில் இருந்து தூக்கி விட்டனர். இருந்தாலும் ஒரு சில மாநிலங்களில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கேரளா ஸ்டோரி வசூலித்த வசூல் விவரம் குறித்த புதிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நெடு நெடுனு., நீளமான முடி வேணுமா., கூடவே அடர்த்தியும் வேணுமா., அப்போ இந்த டிப்ஸ மட்டும் try பண்ணுங்க!!

அதன்படி, தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியான 15 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.171 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கூடிய விரைவில் இப்படம் ரூ.200 கோடி வசூலைத் தாண்டும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here