ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டஸ் அணியை எதிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தனது கடைசி லீக் போட்டியில் பிளே ஆப் சுற்றை எதிர் நோக்கி விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, CSK அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே களமிறங்கினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் குவித்து அசத்தினார். இதில், ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 3 பவுண்டரி 7 சிக்ஸர் உட்பட 79 ரன்களை எடுத்து வெளியேறினார். இதன் தொடர்ச்சியாக துபே 9 பந்தில் 3 சிக்ஸர் உட்பட 22 ரன்களும், டெவோன் கான்வே 87 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அடேங்கப்பா.., தி கேரளா ஸ்டோரி வசூல் இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!
இதையடுத்து, ஜடேஜாவுடன் தோனி இணைந்தார். இவர்களில், ஜடேஜா தொடர்ந்து பவுண்டரிகளை விளாச 7 பந்தில் 20 ரன்களை குவித்தார். தன் பங்கிற்கு தோனியும் 4 பந்தில் 5 ரன்கள் எடுக்க CSK அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களை டெல்லி அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.