இனி பூரிக்கு தொட்டு சாப்பிட குடைமிளகாய் கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க., குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!!

0
இனி பூரிக்கு தொட்டு சாப்பிட குடைமிளகாய் கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க., குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!!
இனி பூரிக்கு தொட்டு சாப்பிட குடைமிளகாய் கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க., குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!!

பொதுவாக நம் வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகளுக்கு அனைவருக்கும் பூரி மிகவும் பிடிக்கும். அப்படி குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக இந்த பூரிக்கு தொட்டு சாப்பிட இதுவரை உருளைக்கிழங்கு குருமாவை தான் சமைத்திருப்போம். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக குடைமிளகாயை வைத்து சுவையான சைடிஷ் சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்;
  • குடைமிளகாய் – 2
  • தக்காளி – 4
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

குடைமிளகாய் கிரேவி சமைப்பதற்கு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைக்கவும். அதில் 3 டீஸ்பூன் ஆயில் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் ஒரு டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட் மற்றும் 1 டீஸ்பூன் மிளகுத் தூளையும் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும்.

மேலும் வெங்காயம் நன்றாக வதங்கி வந்தவுடன் தக்காளியையும் அதில் போட்டு வதக்கவும். பிறகு அதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். மேலும் கிரேவியில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும்போது நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை அதில் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

எச்சரிக்கை.., தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

பிறகு அதில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் மட்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து கடாயை மூடி போட்டு மூடவும். பின்னர் குழம்பு நன்றாக கொதித்து கிரேவி பக்குவத்திற்கு வரும்போது அடுப்பை ஆப் செய்யவும். இப்போது நாம் சமைத்திருக்கும் குடைமிளகாய் கிரேவியை சுடச்சுட பூரிக்கு வைத்து சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here