
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சில முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை வெயிலுடன் ஆரம்பித்து மாலையில் மழையுடன் முடிகிறது. இது கடந்த சில நாட்களாகவே நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் மேல் அடுக்கு சுழற்சி திசை வேகத்தின் மாறுதல் காரணமாக தேனி, தருமபுரி, திருப்பத்தூர், தென்காசி, கிருஷ்ணகிரி, வேலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜீன்ஸ் பட பாடலை நிஜமாக்கிய ரூபேஷ் மாசன்.., நிலவில் நிலம் வாங்கி அசத்தல்.., என்ன சொன்னார் தெரியுமா!!!