ஜீன்ஸ் பட பாடலை நிஜமாக்கிய ரூபேஷ் மாசன்.., நிலவில் நிலம் வாங்கி அசத்தல்.., என்ன சொன்னார் தெரியுமா!!!

0
ஜீன்ஸ் பட பாடலை நிஜமாக்கிய ரூபேஷ் மாசன்.., நிலவில் நிலம் வாங்கி அசத்தல்.., என்ன சொன்னார் தெரியுமா!!!
ஜீன்ஸ் பட பாடலை நிஜமாக்கிய ரூபேஷ் மாசன்.., நிலவில் நிலம் வாங்கி அசத்தல்.., என்ன சொன்னார் தெரியுமா!!!

கடந்த ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் இந்தியா மிகப்பெரிய வரலாறு படைத்தது. இந்த சாதனைக்கு இந்திய மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். தற்போது சந்திராயன்-3 நிலவில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லே பகுதியின் UCMAS இன் பிராந்திய இயக்குனர் ரூபேஷ் மாசன் ஆகஸ்ட் 25 ம் தேதி நிலவில் நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்து ரூபேஷ் மாசன் கூறுகையில், நியூயார்க் நகரத்தில் உள்ள தி லூனார் ரெஜிஸ்ட்ரியில் இருந்து Luna Earths Moon, Tract 55-Parcel 10772 என்ற இடத்தை வாங்கியுள்ளதாகவும், இந்த நிலத்திற்கான சான்று 25ம் தேதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

120 வயதில் கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி.., அதுவும் எந்த விஷயத்துக்காக தெரியுமா?

மேலும் பேசிய அவர் அங்கு ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ. 2,405 மட்டுமே என்றும், இனி வரும் காலங்களில் பூமியில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ரூபேஷ் மாசன் தெரிவித்துள்ளார். தற்போது இவர் நிலவில் நிலம் வாங்கிய விஷயம் இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் அனைவரும் ஜீன்ஸ் படத்தின் பாடல்(அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்) வரிகளை நிஜமாக்கிட்டீங்களே என கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here