தனுஷை போன்றே சிம்புவிற்கும் விழுந்த அடி.., ஒரே நாள்ல இப்படியா நடக்கும்.., சோகத்தில் ரசிகர்கள்!!

0

வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியான சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெந்து தணிந்தது காடு:

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து இன்று வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பலனை அளிக்கும் விதமாக படம் அமைந்துள்ளது. குறிப்பாக படத்தில் நடிகர் சிம்புவின் வித்தியாசமான நடிப்பால் திரையுலகமே அவரை பாராட்டி வருகிறது.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு, புது பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது இன்று அதிகாலையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம், திரைக்கு வந்து சில மணி நேரங்களில் முழு படத்தை தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிட்டுள்ளதால் சிம்பு ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.இந்த சம்பவத்தை போன்றே அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிட்டனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ஆனால் ரசிகர்கள் படத்தை தியேட்டரில் சென்று பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இணையத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை மக்கள் தியேட்டருக்கு சென்று பார்ப்பார்களா, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பெரும்பாலும் நடிகர் சிம்பு ஒவ்வொரு முறை கீழே விழும் போது அவரை தாங்கி பிடிப்பவர்கள் ரசிகர்கள் என்று எல்லா நிகழ்ச்சியிலும் கூறுவார். அந்த வகையில் இப்படம் பெரிய வசூலை அள்ளும் என பட குழுவினர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here