தெருவில் விளையாடும் இந்திய பந்து வீச்சாளர்.., இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!!

0
தெருவில் விளையாடும் இந்திய பந்து வீச்சாளர்.., இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!!
தெருவில் விளையாடும் இந்திய பந்து வீச்சாளர்.., இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

இந்திய சுழற் பந்துவீச்சாளர்!!

சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இந்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். கேப்டன் ரோஹித் மற்றும் ராகுல் ட்ராவிட்டும் தான் அஸ்வினை அணியில் எடுப்பதற்கு BCCI க்கு பரிந்துரை செய்தனர். இதனால் தான் இந்த ஆண்டு உலக கோப்பையில் அஸ்வின் இடம்பெற்றார்.

இந்நிலையில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை தக்க வைத்து கொள்ள அஸ்வின் போராடி வருகிறார். மேலும் இந்த உலக கோப்பை தொடருக்கு தனது பழைய பார்மை கொண்டு வர தீவிர பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் தனது Stress குறைக்கும் விதமாக சென்னை வீதியில் சில இளம் வீரர்களுடன் சேந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். அதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்


அஸ்வின் இந்திய அணிக்காக அஸ்வின் 86 டெஸ்ட் போட்டிகளில் 442 விக்கெட்டுகளையும், 131 ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளையும், 56 டி20 போட்டிகளில் 66 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 154 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 157 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here