தமிழகத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்ட திட்டம்., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0
தமிழகத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்ட திட்டம்., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!
தமிழகத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்ட திட்டம்., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

வீடுகளிலோ, அலுவலகங்களிலோ பாதுகாப்பு பயனாகவும், குற்றவாளிகளை துப்பறிய உதவும் காலத்துக்கு ஏற்ற கருவியாக சி.சி.டி.வி. விளங்குகிறது. இந்த சி.சி.டி.வி மூலம் பல குற்றவாளிகள் போலீசிடம் சிக்குகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மொபைல் கட்டுப்பாட்டுடன் செயற்கைகோள் இணைப்புடன் கூடிய அதிநவீன சி.சி.டி.வி.வாகனம் மாவட்ட காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் குமரவேல் மற்றும் மேயர் சுஜாதா கொடுத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 கோடி நிதியுதவியுடன் 56 லட்சம் மதிப்புள்ள வாகனத்தில் 937 சி.சி.டி.வி. கேமரா, 6 அதிநவீன கேமரா, சிக்னல் ஜாமர் மற்றும் 2 கேமராக்கள் மூலம் 2 கி.மீ. வரை காட்சி பதிவாகும் படி இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை பெற்ற டி.ஜி.பி.சைலேந்திரபாபு கூறுகையில், “வாகனத்தை தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளர்களுக்கு குவியும் நலத்திட்டம் – மாநில முதல்வரின் அடுத்த அறிவிப்பு வெளியீடு!!

மேலும் முதல் கட்டமாக டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை தீபத்திருவிழா அன்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலும் செயல்படுத்த உள்ளோம் என கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் வழக்குகள் அதிகமாகி கொண்டு வருகின்றன. அதை ஒழிக்கவும் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். மேலும் பயனுள்ள அதிநவீன வாகனத்தை கொடுத்த வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here