விஜய் சேதுபதிக்கே விபூதி அடித்த விஷ்ணு விஷால்.., ஒரே நாளில் பீட் செய்து முன்னுக்கு வந்த நடிகர்!!

0
விஜய் சேதுபதிக்கே விபூதி அடித்த விஷ்ணு விஷால்.., ஒரே நாளில் பீட் செய்து முன்னுக்கு வந்த நடிகர்!!
விஜய் சேதுபதிக்கே விபூதி அடித்த விஷ்ணு விஷால்.., ஒரே நாளில் பீட் செய்து முன்னுக்கு வந்த நடிகர்!!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் வசூல் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

கட்டா குஸ்தி:

கோலிவுட் வட்டாரங்களில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான FIR திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்ல அய்யாவு படைப்பில் கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான நிலையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் தியேட்டரில் முதல் ஷோவில் ரசிகர்கள் வராமல் மந்தமாக இருந்த நிலையில், அடுத்தடுத்து காட்சிகளுக்கு தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி ஹீரோவை விட ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி கதாபாத்திரம் மக்களுக்கு அதிகம் பிடித்து போனது. இதனால் மக்கள் ஆரவாரத்துடன் தியேட்டருக்கு வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் நேற்று மட்டும் கிட்டத்தட்ட 4 கோடிகளை வசூலாக பெற்றுள்ளது.

எனக்கும் அசீமுக்கும் வித்தியாசம் இல்லையா? காண்டான கமல்? அப்போ ரெட் கார்டு கன்ஃபார்மா?

இதில் தமிழகத்தில் 1.5 கோடியும், தெலுங்கானாவில் 1 கோடியும் வசூலாக பெற்றுள்ளது. இந்த படத்தோட மோதிய விஜய் சேதுபதியின் DSP திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி உள்ளது. படத்தின் விமர்சனம், வசூலும் ரொம்ப மோசமான நிலையில் இருந்து வருகிறது. மேலும் கட்டா குஸ்தி திரைப்படம் விடுமுறை நாட்களில் அதிக வசூலை அள்ளும் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here