மாற்றுத்திறனாளர்களுக்கு குவியும் நலத்திட்டம் – மாநில முதல்வரின் அடுத்த அறிவிப்பு வெளியீடு!!

0
மாற்றுத்திறனாளர்களுக்கு குவியும் நலத்திட்டம் - மாநில முதல்வரின் அடுத்த அறிவிப்பு வெளியீடு!!
மாற்றுத்திறனாளர்களுக்கு குவியும் நலத்திட்டம் - மாநில முதல்வரின் அடுத்த அறிவிப்பு வெளியீடு!!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று(டிசம்பர் 3) கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் என ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சி உலகெங்கும் அரங்கேறி கொண்டு வருகிறது. மேலும் இந்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிதியுதவியும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் சமூக நலத்துறை சார்பில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாற்றுத்திறனாளிகளுக்கு 2022ம் ஆண்டுக்கான மாநில விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “சில நேரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இனி வரும் காலங்களில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் உரிய நேரத்தில் மற்றவர்களுக்கு வழங்கும் உதவித் தொகையை விட 25 சதவீதம் அதிகமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ், பாதாம், முந்திரி உள்ளிட்ட உணவு கிட் வழங்கும் திட்டம் – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!!

மேலும், மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு அரசு மற்றும் உயர் நிறுவனங்களில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதியை உயர்த்தி கொடுக்கவும், மாற்றுத்திறனாளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெற்ற கடனை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here