குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ், பாதாம், முந்திரி உள்ளிட்ட உணவு கிட் வழங்கும் திட்டம் – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!!

0
குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ், பாதாம், முந்திரி உள்ளிட்ட உணவு கிட் வழங்கும் திட்டம் - மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!!
குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ், பாதாம், முந்திரி உள்ளிட்ட உணவு கிட் வழங்கும் திட்டம் - மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!!

கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் உணவு மற்றும் சிவில் துறை அமைச்சர் ஜி.ஆர்.அணில் முன்னிலையில் நிரவு திட்டத்தின் கீழ் உணவுப்பெட்டி வழங்கும் விழா நடைபெற்றது. மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் அரிசி, பாதாம், முந்திரி, ஹார்லிக்ஸ் உட்பட பல உணவு பொருட்கள் கொண்ட உணவுப்பெட்டிகள் வழங்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜி.ஆர்.அணில், கேரளாவில் வசிக்கும் மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர், அகதிகள் உட்பட அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு, உணவுப்பெட்டி விநியோகம், வீடற்றவர்களுக்கு வீடு என பல்வேறு திட்டங்களை கேரள அரசு செயல்படுத்தி வருகிறது.

வேலை தேடும் சென்னை வாசிகளா நீங்கள்?? Dexter Academy வழங்கும் அரிய வாய்ப்பு,, முழுவிபரம் உள்ளே!!

 

இதைத்தொடர்ந்து அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு திட்டம் இம்மாத (டிசம்பர்) இறுதிக்குள் முடியும் என்றும், இதுவரை 1000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இந்தத் திட்டத்தில் பயனடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் 137 இடங்களில் மாவேலி ஸ்டோர்ஸ் மூலம் நடமாடும் ரேஷன் கடை அமைத்து சலுகை விலையுடன் மளிகை பொருட்களை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கே.டேனியல், மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் பயன்பெறும் வகையில் உணவுப்பெட்டி வழங்கும் திட்டத்திற்கு அரசு 2.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here