கிராமத்து “சைவ ஈரல் கிரேவி” – செஞ்சு தான் பாருங்களேன்!!

0
சைவ ஈரல் கிரேவி
சைவ ஈரல் கிரேவி

சைவ பிரியர்களுக்கு நல்ல கிரேவி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். மிகவும் வித்தியாசமான கிரேவி என்றால் அது “சைவ ஈரல் கிரேவி” ரெசிபி தான். அந்த ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!!

தேவையான பொருட்கள்

  • பாசிப்பயறு – 250 கிராம்
  • வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 2
  • இஞ்சி & பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 3 டீஸ்பூன்
  • மிளகு – 7 அல்லது 8
  • கடுகு & உளுந்து – தேவையான அளவு
  • கருவேப்பில்லை – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 4 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்

செய்முறை

முதல் நாள் இரவே பாசிபயரினை நன்றாக ஊற வைத்து விட வேண்டும். பின், மிக்ஸியில் பாசிப்பயறு, உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு, இதனை எடுத்து இட்லி சட்டியில் ஊற்ற வேண்டும். அது வெந்து வந்ததும் அதனை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுந்து, வெங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்க்க வேண்டும். பின், அதில் இஞ்சி & பூண்டு விழுதினையும் சேர்க்க வேண்டும். இந்த கலவை நன்றாக வதங்க விட வேண்டும்.

மாசு, மரு இல்லாத கிளியர் சருமம் வேண்டுமா?? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!!

பின், இதில் மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். இவற்றுடன், எடுத்து வைத்துள்ள பாசிப்பயறு துண்டுகளை சேர்க்க வேண்டும். நன்றாக மசாலா படும் வரை கிண்டி விட்டு இத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். கடைசியாக, இதில் கொத்தமல்லி மற்றும் கருவேப்பில்லை சேர்த்து இறக்கி வைத்து விட வேண்டும். அவ்ளோ தான்!!

சுவையான “சைவ ஈரல் கிரேவி” தயார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here