ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு!!

0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் இன்று நினைவு இல்லமாக திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

வேதா இல்லம் திறப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக அறிவித்திருந்தது மாநில அரசு. தொடர்ந்து வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பொறுப்பு பொதுப்பணித்துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆயத்த வேலைகள் முடிந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல தற்போது வேதா இல்லம் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாய் ஃப்ரண்ட் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதி – கல்லூரி நிர்வாக நோட்டிஸினால் பரபரப்பு!!

வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் விழாவின் தொடக்கமாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் வைத்து அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து காலை 10.30 மணியளவில் துணை முதல்வர் முன்னிலையில் ரிப்பன் வெட்டியும் கல்வெட்டு திறந்தும் வேதா நினைவில்லத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிச்சாமி. பிற்பாடு இருவரும் சென்று வீட்டினுள்ளே இருந்த குத்துவிளக்கை ஏற்றினார்கள். விழாவுக்கு முன்னாள் தலைவர்களும் அமைச்சர்களும் வருகை தந்தனர்.

24 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள வேதா இல்லம் மூன்று மாடிகளை கொண்டது. 32 ஆயிரத்து 721 நகரும் பொருட்களும், 4 கிலோ எடையுள்ள தங்க நகைகளும், 8 ஆயிரத்து 394 புத்தகங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஜெயலலிதாவின் சினிமா அரசியல் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் கருப்பு வெள்ளை நிறத்திலான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. பின்பு அவர் படித்த புத்தகங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையிலுள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர் வைக்கப்பட்டது. மேலும் வளாகத்திற்குள்ளிருந்த ஜெயலலிதாவின் 9 அடி உருவச்சிலையை முதல்வர் திறந்து வைத்தார். பின்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 ம் தேதி மாநிலம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என பழனிசாமி அறிவித்தார். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி வேதா இல்லத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here