தைப்பூச திருவிழா – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!!

0

இன்று தமிழ் கடவுளான முருகப்பெருமானை போற்றும் வகையில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இதனை முன்னிட்டு முருகப்பெருமானை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தரிசித்து வருகின்றனர்.

தைப்பூச திருவிழா:

தமிழ் கடவுள் முருகப்பெருமானை போற்றும் வகையில் இன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி முருகனுக்கு சிறப்பான நாளாகும். அதிலும் தை மாசத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமியை தான் நாம் தைப்பூச திருவிழாவை கொண்டாடி வருகிறோம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் இன்று தேரோட்டம் நடைபெறவுள்ளது. மேலும் பழனியில் நாள் ஒன்றுக்கு 25000 பக்தர்களை முருகனை தரிசிக்க அனுமதித்து வருகின்றனர். மேலும் பழனியில் கடந்த 22ம் தேதி முதல் தைப்பூச திருவிழா தொடங்கியுள்ளது. இதனால் பழனியில் பக்தர்களின் வருகை வந்த வண்ணமாகவே உள்ளது. மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்தும் பாதயாத்திரையில் வந்தும் முருகனை தரிசித்து வருகின்றனர். பால் காவடி, மயில் காவடி, மச்ச காவடி என பலவகையான காவடிகளை எடுத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் – குடியரசுத்தலைவரின் உரையை புறக்கணிக்க முடிவு!!

மேலும் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்ட்டம் நேற்று நடைபெற்றது. தற்போது இன்று மலை அடிவாரத்தில் தேரோட்டம் நடைபெற உள்ளது. மேலும் முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் பல மாதங்கள் கழித்து கடலில் பக்தர்கள் மகிழ்ச்சியாக குளித்து வருகிறார்கள், கடலில் குளித்துவிட்டும், அழகு குத்தியும் அங்கு முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர் பக்தர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here