புற்றுநோயால் பாதிக்கப்பட்ட துணைநடிகர் தவசி – நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் உதவி!!

0

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் நம் அனைவரின் மனதையும் கவர்ந்த துணை நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சினிமா துறையினர் மற்றும் அரசோ உதவமாட்டார்களா என தவசி மற்றும் அவர் குடும்பத்தினர் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

துணைநடிகர் தவசி புற்றுநோயால் பாதிப்பு:

ஜில்லா, நான் கடவுள், வீரம் மற்றும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் குடியிருப்பவர் தவசி. கடந்த சில காலமாக உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அடையாளம் தெரியாத அளவிற்கு அவரின் உடல் மெலிந்து பார்பதற்க்கே கவலையாக இருக்கிறது. 2013-ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு அப்பாவாக தவசி நடித்துள்ளார். “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனம் மூலம் நம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.

தற்பொழுது, உணவுகுழாயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் தவசி நோயிலுந்து மீண்டு வர வேண்டும் என்றும் சினிமாத்துறையினர் அவருக்கு உதவ வேண்டும் என்றும் மக்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் தனது சொந்த மருத்துவமனையில் வைத்து நடிகர் தவசிக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். டாக்டர். சரவணன் செய்த உதவி மக்களிடையே சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.  மேலும் நடிகர் சூரி, தவசி மற்றும் உதவியாளருக்கு 3 வேளை உணவு, சிகிச்சைக்கு பணம் மற்றும் சிவகார்த்திகேயன் ரூ.25,000 பண உதவி வழங்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here