வனிதா 4வது திருமணத்தை பற்றி ஒத்துக்கொள்கிறாரா?? அவரே வெளியிட்ட பதிவு!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது தனது 4வது திருமணம் பற்றி புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வனிதா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் வனிதா. தனது அடாவடியாக பேச்சாலும், மிரட்டல் தோரணையாலும் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் அதிக பேச்சு வாங்கியதும் வனிதா தான்.

அதன் பிறகு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதும் வனிதா தான். இப்படி இருக்க இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா டைட்டிலை கைப்பற்றி அசத்தினார்.

அதன் பிறகு தனியாக யூடுப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை திருமணமும் செய்துகொண்டார். இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. மேலும் மக்கள் பலரும் இவரை திட்ட ஆரம்பித்தனர். ஆனால் பீட்டர் பாலுக்காக அனைவரையும் எதிர்த்து நின்றார் வனிதா.

பீட்டர் பால் நல்லவர் கிடையாது என அனைவரும் சொல்லியும் எதையும் காது கொடுத்து வாங்கவில்லை. கடைசியில் பீட்டர் பாலின் உண்மை முகம் வனிதாவுக்கு தெரியவர அவரை துரத்தியும் விட்டார்.

இந்நிலையில் அனைத்தையும் மறந்து வாழும் வனிதா பற்றிய புதிய செய்தி இணையத்தில் உலா வந்தது, அதாவது வனிதா 4வது திருமணம் செய்ய போகிறார் என்ற டாக் வைரலாகி வருகிறது. இதனால் கடுப்பான வனிதா தற்போது வரை தான் சிங்கள் தான். இந்த புரளியை நம்ப வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here