கடனில் தத்தளிக்கும் சிவகார்த்திகேயன் – சரியான நேரத்தில் கைகொடுத்த சன் பிக்ச்சர்ஸ்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது சன் டிவியுடன் 75 கோடி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இந்த செய்தி இணையத்தில் உலா வருகிறது.

சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார். எதிர்நீச்சல், ரஜினி முருகன் என பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தும் நடிக்க ஆரம்பித்தார். சின்னத்திரையில் இருந்து வந்தவருக்கு இப்படி ஒரு வளர்ச்சியா?? என்னும் அளவிற்கு இருந்தது.

மேலும் சில படங்கள் சிவகார்த்திகேயனுக்கு தோல்வியில் முடிந்ததால் பல கோடி கடனில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏனெனில் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரித்தும் வருகிறார். இதனால் சில படங்கள் தோல்வியடைய பல கோடி கடனில் சிவகார்த்திகேயன் தத்தளித்து வருகிறாராம்.

இந்நிலையில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனுடன் ஒரு டீல் பேசியுள்ளது. அதாவது தொடர்ந்து 5 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். அதற்கு ரூ.75 சம்பளம் வாங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். அவருக்கு ரூ.70 கோடி பக்கத்தில் கடன் இருப்பதால் அது கடனுக்கே சரியாக போயிட்டது என்றும் வட்டாரங்கள் தகவலளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here