“கொரோனா தேவி அம்மன் வேற யாரும் இல்ல” கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் – வனிதா பதிலடி !!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் வத்திக்குச்சி வனிதா. மக்கள் வழிபடும் கொரோனா தேவி அம்மனுக்கும் இவருக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறி நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர்.

வனிதா:

பிரபல குணச்சித்திர நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் தொடக்க காலத்தில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். மேலும் இவர்களது குடும்ப பிரச்சனைகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வைரலானது. இந்நிலையில் சில வருடங்களாக காணாமல் போன வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டார். இவர் வீட்டிற்குள் நுழைந்ததும் பிக் பாஸ் வீடு அனலாக இருந்தது. இதன் காரணமாகவே மக்கள் இவருக்கு வத்திக்குச்சி வனிதா என்று பெயர் வைத்தனர். என்ன தான் மக்கள் இவரை கலாய்த்தாலும் இவர் மக்கள் மத்தியில் செம ரீச் ஆனார். அதன்பின்பு இவர் பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டது இவரது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸை விரட்டுவதற்காக கொரோனா தேவி சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது வனிதா விஜயகுமார் என்று கூறி இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். மேலும் வனிதாவை நினைவில் வைத்து தான் கொரோனா தேவி சிலையை செய்துள்ளார்கள் என்றும் கூறி வருகின்றனர்.

தன் சகோதரரை முதன்முறையாக அறிமுகப்படுத்திய ஸ்னேகா – வைரலாகும் புகைப்படம்!!

இதுகுறித்து வனிதா கூறுகையில் இது தவறு கிடையாது. நான் மூக்குத்தி அணிவேன், அந்த அம்மனுக்கும் மூக்குத்தி போட்டதால் என்னை போல் தெரிகிறது. கொரோனா தேவியுடன் என்னை ஒப்பிட்டு வரும் மீம்ஸ்களை பார்த்து நானும் என் குழந்தைகளும் சிரித்தோம். அம்மனை பார்க்கும் போது என்னை நினைப்பது நல்ல விஷயமே. மக்கள் மனதில் நான் இன்னும் நிலைத்து நிற்கிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று செம பாசிட்டிவாக பதிலளித்துள்ளார் வத்திக்குச்சி வனிதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here