வத்திகுச்சியை வம்புக்கு இழுத்த பிரபலம்…! விரக்தியில் வனிதா எடுத்த முடிவு!!!

0

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக விளங்குபவர் நடிகர் விஜயகுமார். இவரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன போட்டி நிகழ்ச்சியில் சுரேஷ் என்பவருக்கு ஜோடியாக நடனம் ஆடி வருகிறார். இந்நிலையில் இவர் பணி இடத்தில் அவமானம் படுத்த பட்டதாகவும், தன்னை சிலர் வம்புக்கு இழுப்பதாகவும் கூறி இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற போவதாக அறிவித்து உள்ளார்.

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்த  நடன நிகழ்ச்சி பிக் பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் போட்டிகளின் போட்டியாளர்களை ஒன்றிணைத்து இரண்டு இரண்டு பேர் வீதம் ஒரு ஜோடியாக இணைந்து நடன போட்டி போடுவது இந்த நிகழ்ச்சியின் மையமாகும். அந்த வகையில் சோம் -ஷிவானி, கேபி – ஆஜித், நிஷா- தாடி பாலாஜி, ஷாரிக் – அனிதா சம்பத் உட்பட பல ஜோடிகள் இந்த போட்டிகளில் இடம் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் ஜோடியாக சேர்ந்தவர்கள் தான் வனிதா -சுரேஷ் சக்கரவர்த்தி. இதன் நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் உள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து வனிதா வெளியேற போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் விஜய் டிவி உடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இந்த சேனல் எனக்கு ஒரு வீடாக மாறியது. அதாவது ,நான் விஜய் டிவியில் பங்கேற்ற பிக் பாஸ், குக் வித் கோமாளி எல்லாம் சரியாக தான் போனது. ஆனால் சமீபத்தில் தான் பணியாற்றும் இடத்தில்,”நான் துன்புறுத்தப்பட்டேன், வம்புக்கு இழுக்கப்பட்டேன். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சக பெண்களை பொறாமையின் பேரில் கொச்சைப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது”, எனவும் இது போன்ற இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்து இருந்தார்.

மேலும் அந்த அறிக்கையில், “வெற்றி பெறுவது மட்டுமே இலக்கு அல்ல, பங்கேற்பதும் வெற்றிதான். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி எனக்கு ஒரு நல்ல பார்ட்னராக இருந்தார். என்னை மன்னித்துவிடுங்கள், சுரேஷ். என்னுடைய முடிவால் இனி இந்த நிகழ்ச்சியில் நீங்கள் தொடர முடியாமல் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது” எனவும் கூறியுள்ளார்.

மேலும் நடந்து முடிந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா ஜோடி நடனத்திற்கு ரம்யா கிருஷ்ணன் ஒரு மதிப்பெண் வழங்கி உள்ளார். இதையடுத்து வனிதாவின் இந்த முடிவுக்கு அந்த நிகழ்ச்சியின்  நடுவர் ரம்யா கிருஷ்ணன் கமெண்ட்ஸ் தான் காரணமாக இருக்குமோ என்று கிசுகிசுக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here