அந்த மாதிரியான கதாநாயகியாக நான் நடிக்க விரும்பவில்லை – வாணி போஜன் ஓபன் டாக்!!

0

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரையில் ஜொலித்துக்கொண்டிருக்கும் வாணி போஜன் தற்போது சியான் 60 என்ற படத்தில் நடித்திருக்கும் அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

வாணி போஜன்

தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜனுக்கு அடுத்த வாய்ப்பே வெள்ளித்திரையில் காத்திருந்தது. ஓ மை கடவுளே என்ற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். சின்னத்திரையின் இவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது அனைவரையுமே அதிசயிக்க வைத்தது.

தற்போது இரண்டாவது படத்திலும் முக்கிய நடிகருடன் இணைந்து நடிக்கவுள்ளார். அதாவது பிரபல முன்னணி நடிகரான விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க இருக்கும் சியான் 60 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதுவும் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்த பொக்கிஷம் என்றும் கூறியுள்ளார்.

இத்தனை நாட்கள் விக்ரமை திரையில் பார்ப்பதற்கும் தற்போது இணைந்து நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், இந்த அனுபவம் தனக்கு பிடித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஒருபடத்தில் நாயகனை எப்பொழுதுமே சுற்றி வந்து கொண்டிருப்பது போன்ற கதாபாத்திரம் தனக்கு பிடிக்காது என்றும், பல புதிய பரிமாணங்களில் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் சின்னத்திரையில் நடித்து வந்த தனக்கு கதாநாயகி என்ற அங்கீகாரம் வெள்ளித்திரையில் கிடைத்திருப்பது பெருமையாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here