அஜித்தின் வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் – இப்போதைக்கு இல்லையாம்!!

0

நடிகர் அஜித்தின் 56வது படமாக உருவாகியிருக்கிறது வலிமை. கடந்த 2019 ம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு இப்போதைக்கு இருக்காது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வலிமை ஃபர்ஸ்ட் லுக்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய வெற்றி படங்களின் இயக்குனர் எச்.வினோத்தின் இயக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் 56வது படமாக வலிமை உருவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஆரம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகர் அஜித் குமாருடன் நடிகை ஹுமா குரேஷி மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மீண்டும் உயரத் தொடங்கும் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

தற்போது வலிமை படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இப்போதைக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாது என்றும் படத்தின் மொத்த படப்பிடிப்புகளும் முடிந்த பிறகுதான் அதற்கான அப்டேட் வெளிவரும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மே 1 ம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை ஒட்டி படத்தை ரிலீஸ் செய்யப்போவதாகவும் அதற்காக படபிடிப்பு வேலைகள் சீக்கிரமாக நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வலிமை படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here