மீண்டும் உயரத் தொடங்கும் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

0

தற்போது சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வந்தது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். தற்போது இன்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

தங்கம்:

கடந்த பண்டிகை கால தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வந்தது. இதனால் இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தங்க விரும்பிகள் அனைவரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். தற்போது இன்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்தோர் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடல் வண்ண உடையில் தேவதையாக சமந்தா – உருகிப்போன ரசிகர்கள்!!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

தற்போது சென்னையில் மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இதன்மூலம் 1 சவரன் ஆபரணத் தங்கம் தற்போது ரூ.36,904, 1 கிராம் ஆபரணத்தங்கம் தற்போது ரூ. 4,613 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிராம் வெள்ளி தற்போது ரூ.70, 1 கிலோ கட்டி வெள்ளி சென்னையில் ரூ.70,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here