5 ஏக்கர் நிலப்பரப்பில் அயோத்தியில் பாபர் மசூதி – கட்டிடப் பணிகள் ஜனவரி 26ல் துவக்கம்!!

0

அயோத்தில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக புதிய மசூதி கட்டுமானப் பணிகள் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவோடு துவங்குகிறது. குடியரசு தின விழாவிற்கு கொடி ஏற்றி பின்பு மரம் நடும் விழாவோடு தொடர்ச்சியாக மசூதி கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அயோத்தியில் பாபர் மசூதி:

இந்தியாவில் மிக நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வந்தது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது மற்றும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. நெடுநாள் பிரச்சனைக்கு தீர்வாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதுடன் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக வேறொரு மசூதி கட்டுவது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்ததது. இதை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார் பிரதமர் மோடி. இதை தொடர்ந்து தற்போது அயோத்தி அருகே பாபர் மசூதி கட்டப்படவுள்ளது. அயோத்தியில் தன்னிப்பூர் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் மசூதி கட்டப்படவுள்ளது. வருகிற ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி காலை 8.30 மணியளவில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு மரம் நடும் விழா நடைபெற உள்ளது. அதன் பின்பு பாபர் மசூதியின் புதிய கட்டுமான பணிகள் தொடங்கவுள்ளன.

அடுத்த 48 மணிநேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

இந்தோ – இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை நிர்வாகிகளால் இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வருமான வரியின் சான்று பெறுதல், வெளிநாட்டினரிடம் இருந்து நிதி உதவி பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. புதிய மசூதியின் வளாகத்தில் சமூக சமையல் அறை, மருத்துவமனை, அருங்காட்சியகம், அச்சுக்கூடம், இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் ஆகியவை கட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

2019ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சன்னி வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்ட 5 ஏக்கர் பரப்பளவில் மசூதி கட்டப்பட உள்ளது. புதிதாக கட்டப்படவுள்ள மசூதியானது மிகப்பெரிய அளவில் இருக்கும் எனவும் பாபர் மசூதியில் இருந்தது போன்று குவிமாடம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாபர் என்கிற பெயருக்கு பதிலாக வேறு ஒரு பெயர் வைக்கப்படும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here