ரூ.118 கோடி வசூலில் ‘வாத்தி’…..,படக்குழு அறிவிப்பு….,

0
ரூ.118 கோடி வசூலில் 'வாத்தி'.....,படக்குழு அறிவிப்பு....,
ரூ.118 கோடி வசூலில் 'வாத்தி'.....,படக்குழு அறிவிப்பு....,

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படம் உலகளவில் சுமார் 118 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

வாத்தி திரைப்படம்

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தில் பள்ளிக்கூட ஆசிரியராக நடிகர் தனுஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில், ‘வாத்தி’ திரைப்படம் வெளியாகி சரியாக ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இந்த படம் குவித்த வசூல் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘வாத்தி’ திரைப்படம் உலகளவில் சுமார் 118 கோடியை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படமும் 100 கோடியை கடந்து சாதனை நிகழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here