
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வெண்பா என்ற பெயரில் பிரபலம் அடைந்து வருபவர் தான் பரீனா. இவர் கோலிவுட் திரையில் ஏகப்பட்ட ஷோக்களுக்கு தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதன் பிறகு தான் இவருக்கென ஒரு தனி அங்கீகாரம் கிடைக்கும் விதமாக பாரதி கண்ணம்மா சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது இவர் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுபோக அவ்வப்போது சோஷியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருந்து, இவர் குறித்து அப்டேட்கள், புகைப்படங்கள் என ஷேர் செய்து வருகிறார். இதுபோக இவரது துணிச்சலான கர்ப்பக்கால போட்டோஷூட்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தது. மேலும் இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்து பெண் என்பதால் இவர் சினிமாவில் வந்ததில் இருந்து, இவர் ஹராமான(தவறான) விஷயம் செய்து வருவதாக கூறி வந்தனர்.
இவரும் அவ்வப்போது இவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்துள்ளார். இந்த நேரத்தில் மீண்டும் ஒருவர் பரீனா ஹராமான செயலை செய்து வருவதாக குறை கூறியுள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ” நான் நடிப்பது மட்டும் ஹராம் இல்லை, சினிமா, சீரியல் பார்ப்பது மற்றும் செலிபிரிட்டிகளை பாலோவ் செய்வது என எல்லாம் ஹராம் தான். மேலும் என்னை குறை சொல்வதை விட்டுவிட்டு உங்க முதுகில் இருக்கும் அழுக்கை கொஞ்சம் கழுவுங்கள் என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.