திரைக்கு வரும் முன்னே கல்லா கட்டிய விஜய்யின் ‘வாரிசு’ – அதுக்குள்ள இத்தனை கோடி லாபமா??

0

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே 180 கோடி வசூலை அள்ளி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

தற்போது கோலிவுட்டில் வசூல் மன்னனாக சிறகடிப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தை இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்குகிறார். தளபதிக்கு ஜோடியாக ட்ரெண்டிங் குயின் ராஷ்மிகா மந்தனா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Surprising details about S.J. Suryah's role in Thalapathy Vijay's 'Varisu' - Tamil News - IndiaGlitz.com

மேலும் இப்படத்தின் அப்டேட்கள் தினமும் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இப்படம் திரைக்கு வருவதற்கு முன்னே வசூல் சாதனை படைத்துள்ளது. அதாவது 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ.50 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதுமட்டுமின்றி படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.60 கோடிக்கும், வெளிநாட்டு உரிமம் ரூ.32 கோடிக்கும், இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமம் ரூ.32 கோடிக்கும் மற்றும் படத்தின் ஆடியோ உரிமம் ரூ.10 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் படம் திரையரங்குக்கு வருவதற்கு முன்னரே 180 கோடி வசூலை அள்ளி உள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு மகிழ்ச்சியில் உறைந்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here