தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, வரும் செப்.15 முதல் இந்த திட்டம் ஆரம்பம்!!

0

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரும் 15ம் தேதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டி திட்டம் துவக்கம்:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் செப்டம்பர் 15, திமுகவை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், அன்று அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் மகத்தான புதிய திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.

அதாவது திமுக தொடங்கப்பட்ட நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் திமுக சார்பில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் திமுக முப்பெரும் விழா ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக சில ஆண்டுகளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த ஆண்டுக்கான திமுகவின் முப்பெரும் விழா வரும் 15ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. எனவே, விருதுநகர் விழாவில் ஏராளமான திமுக தொண்டர்கள் வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் சிறப்புமிக்க முப்பெரும் விழா இந்த ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் பெருமைமிகு விருது நகரில் நடைபெறுகிறது. விருதுநகரில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை, ‘மருதிருவர்’ போல, திமுகவை அந்த மண்ணில் வளர்த்தெடுக்கும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இரவு-பகல் பாராது மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here