பிக்பாஸ் 6க்கு வரப்போற மொத்த போட்டியாளர்கள் இவங்க தான்? இணையத்தில் லீக்கான அதிரடி லிஸ்ட்!!

0
பிக்பாஸ் 6க்கு வரப்போற மொத்த போட்டியாளர்கள் இவங்க தான்? இணையத்தில் லீக்கான அதிரடி லிஸ்ட்!!

விஜய் டிவியில், வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 6 பட்டியல்:

விஜய் டிவியில் வருகிற அக்டோபர் மாதம், பிக் பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி, பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கான, உத்தேச பட்டியல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன்படி, இந்தப் போட்டியில் பாரதி கண்ணம்மா ரோஷினி, டிடி என்கிற திவ்யதர்ஷினி, டிக் டாக் புகழ் ஜிபி முத்து, சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா, குக் வித் கோமாளி பவித்ரா, தர்ஷா மற்றும் தர்ஷன், ராஜா ராணி வில்லி விஜே அர்ச்சனா, பாடகி சிவாங்கியின் அம்மா, சீரியல் நடிகை செந்தில்குமாரி, மற்றும் வித்யூலேகா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இதுபோக இந்த சீசனில் புதிதாக, திரைத்துறையில் இல்லாத பிரபலங்கள் வர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி youtube பிரபலம் அஜித் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த மாடல் டைமரான் ஆகியோர் இந்த சீசனில் பங்கேற்கலாம் என சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் உத்தேச பட்டியல் தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here