UPI பணப்பரிவர்த்தனைக்கு கட்டணமா?? NPCI கொடுத்த அதிரடி விளக்கம்!!

0
UPI பணப்பரிவர்த்தனைக்கு கட்டணமா?? NPCI கொடுத்த அதிரடி விளக்கம்!!
UPI பணப்பரிவர்த்தனைக்கு கட்டணமா?? NPCI கொடுத்த அதிரடி விளக்கம்!!

நாட்டில் உள்ள பெரும்பாலானோர் UPI மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என NPCI தெரிவித்துள்ளது.

UPI சேவை

நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் GPay, Phonepe, Paytm, Amazon pay இப்போது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. மேலும் இன்றைய காலகட்டத்தில் UPI செயலிகளை பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது. இதனால் இதில் தினம் தினம் புது புது அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் சமீபத்தில் இந்த செயலி மூலம் ரூ.2000 க்கு மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியானது. இந்த தகவல் மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில் தற்போது இதற்கு NPCI விளக்கமளித்துள்ளது.

அதாவது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு இடையே UPI செயலி மூலம் நடைபெறும் பணபரிவர்தனை களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளனர். ஆனால் பி.பி.ஐ எனப்படும் பிரீப்பெய்டு பேமென்ட் கருவியைக் கொண்டு, ரூ.2000-க்கு மேல் வணிகர்கள் மேற்கொள்ளும் பரிமாற்றங்களுக்கு மட்டும் தான் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த மாணவர்களுக்கு ரூ.8,000 உதவித்தொகை., வெளியான முக்கிய தகவல்!!

மேலும் இது குறித்த விளக்கமளித்துள்ள NPCI, ஒரு நிறுவனத்தில் வாலட் வைத்திருக்கும் வாடிக்கையாளர் இன்னொரு நிறுவனத்தின் வாலட் வைத்திருப்பவருக்கு பணம் செலுத்தும் போது ஏற்படக்கூடிய செலவுகளை ஈடுகட்ட தான் இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here