அவசர உதவி எண்களை தொடர்பு கொண்டு சமோசா, பான்மசாலா, ரசகுல்லா கேட்கும் விஷமிகள் – கொரோனாவிலும் குதூகலம்..!

0

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களும் வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநில அரசு அவசர உதவி எண்களை அறிவித்து இருந்தது.

தவறான பயன்பாடு:

1076 என்ற அவசர உதவி எண்ணை உத்திரப்பிரதேச அரசு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கேட்டு பொதுமக்கள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்பு கொள்ளும் சில விஷமிகள் சிலர் சட்னியுடன் சமோசா, ரஸகுல்லா, பான்மசாலா மற்றும் குட்கா போன்றவற்றைக் கேட்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். மேலும் உண்மையிலேயே ஒருவர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு அவசரமாக ரஸகுல்லா தேவைப்படுவதாகக் கூறினார்.

அதிகாரிகளும் அப்பகுதியில் இருக்கும் இனிப்பு வியாபாரி மூலம் அந்த வீட்டுக்கு ரஸகுல்லாவுடன் சென்றுள்ளனர். உண்மையிலேயே அங்கு இருந்த 80 வயது நபருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் இனிப்பு சாப்பிட வேண்டிய நிலையில்தான் ரஸகுல்லா கேட்டுள்ளார் என்பது பிறகு தெரிய வந்துள்ளது. இருப்பினும் சில நபர்கள் தேவையற்ற காரணத்திற்காக தொடர்பு கொண்டு மதுபானம் முதல், பீட்சா வரை கேட்பதாகவும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here