மாஸ்க் போடலனா காய்கறிகள் கிடையாது – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

0

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நெல்லை டவுன் காய்கறி சந்தைக்கு முகக் கவசம் அணியாமல் வந்தால் காய்கறியை வழங்காமல் வியாபாரிகள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 14 உடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களுக்கு அன்றாடம் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Coronavirus latest: India announces complete lockdown | News | DW ...

நோய் பரவலை தடுக்க சமூக இடைவெளி, முகக் கவசம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபற்றி எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெரும்பாலான மக்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் வீட்டை விட்டு வெளியே வருகிகின்றனர்.

காய்கறிச் சந்தை

மாஸ்க் போடாவிட்டால் காய்கறி கிடையாது

நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறிச் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்த நிலையில், ஊரடங்கு அமலில் இருப்பதை கருத்தில் கொண்டு அந்தச் சந்தையை இரண்டாக பிரித்து ஒன்று டவுன் சாப்டர் பள்ளி மைதானத்திற்கும், மற்றொன்று மாநகராட்சி அலுவலகம் எதிரே இருக்கும் பொருட்காட்சித் திடலுக்கும் மாற்றப்பட்டு இயங்கி வருகிறன. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை செயல்படும் இந்த தற்காலிக காய்கறிச் சந்தைகளுக்கு பொதுமக்கள், சில்லறை வியாபாரிகள் என ஏராளமானோர் வருகின்றனர்.

முகக்கவசம்

இவர்களில் பெரும்பாலானோர் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. முகக் கவசம் கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இன்று காலை முதல், சந்தையில் முகக் கவசம் அணியால் வரும் மக்கள், சில்லறை வியாபாரிகளுக்கு காய்கறி வழங்காமல் வியாபாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே காய்கறி என வியாபாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Chennai lockdown news: Today's updates from your city | Chennai ...

இதனால், முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள் காய்கறி வாங்காமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. பின்னர், சில தன்னார்வ அமைப்புகள் மூலம் முகக் கவசம் கட்டாயம் என்பது வலியுறுத்தப்பட்டு அவர்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மக்கள் காய்கறி வாங்கிச் சென்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here