சிவகார்த்திகேயனுக்கு டாடா காட்டிய இயக்குனர் வெங்கட் பிரபு.., காரணம் இதுதானாம்.., லீக்கான தகவல்!!

0
சிவகார்த்திகேயனுக்கு டாடா காட்டிய இயக்குனர் வெங்கட் பிரபு.., காரணம் இதுதானாம்.., லீக்கான தகவல்!!
சிவகார்த்திகேயனுக்கு டாடா காட்டிய இயக்குனர் வெங்கட் பிரபு.., காரணம் இதுதானாம்.., லீக்கான தகவல்!!

தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் திரை வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இதை தொடர்ந்து இவரது 21 வது திரைப்படம் இயக்குனர் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் வரவுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க கமிட்டாகியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் இவரது அடுத்த படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க போவதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் தளபதியின் 68 வது படத்தை இயக்குனர் அட்லீ இயக்குவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர் ஜவான் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் விஜயின் 68 படத்தினை அவரை இயக்கவில்லை எனவும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது.

ராஜா ராணி சீரியலை விட்டு வந்ததும் எனக்கு செம லக் கிடைச்சுச்சு.., உண்மையை உடைத்த அர்ச்சனா!!

மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும், இப்படத்தை ags நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோலிவுட் திரையில் ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு, தற்போது நடக்காமல் போய்விட்டது என்ற வருத்தம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here