ரேஷன் அட்டைதாரர்களே.., இனி எந்த விபரங்களுக்கும் இதுக்கு கால் பண்ணா போதும்.., முழுவிபரம் உள்ளே!!

0
ரேஷன் அட்டைதாரர்களே.., இனி எந்த விபரங்களுக்கும் இதுக்கு கால் பண்ணா போதும்.., முழுவிபரம் உள்ளே!!
ரேஷன் அட்டைதாரர்களே.., இனி எந்த விபரங்களுக்கும் இதுக்கு கால் பண்ணா போதும்.., முழுவிபரம் உள்ளே!!

ஏழை எளிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் நலனுக்காக, அரசானது பல்வேறு சலுகைகளை அறிவித்த வண்ணம் வருகிறது. இதில், குறிப்பாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. மேலும், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற திட்டம் மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மாநிலத்தில் எந்த பகுதியிலும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள் எங்கு வேண்டுமானாலும் வாங்கி கொள்ளும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, ரேஷன் கடைகளில், பண பரிவர்த்தனையை எளிமையாக்கும் விதமாக UPI எனப்படும் பரிவர்த்தனையை தரவு சேவையை அறிமுகப்படுத்த இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தன. மேலும் ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களுடன் கேழ்வரகு வழங்கும் திட்டத்தையும் ஒரு சில மாவட்டங்களில் தொடங்கி அரசு உள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு டாடா காட்டிய இயக்குனர் வெங்கட் பிரபு.., காரணம் இதுதானாம்.., லீக்கான தகவல்!!

இந்த திட்டங்களை எல்லாம் மக்கள் பெற வேண்டுமானால், முதலில் ரேஷன் கடைகள் திறந்திருக்குமா இல்லையா என தெரிந்திருக்க வேண்டும். இதனை தெரிந்துக் கொள்ள, 9773904050 நம்பருக்கு SMS செய்தால் போதும் ரேஷன் கடை திறந்திருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் என சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை ஆணையர் சண்முகவேல் தெரிவித்துள்ளார். மேலும், பொதுவாக ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை மணி 3 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும் என குறிப்பிட்டு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here