வரலாறு படைத்த இந்திய இளம் வீரர்கள்…, மல்யுத்தத்தில் 3 பதக்கங்களை அள்ளி அசத்தல்!!

0
வரலாறு படைத்த இந்திய இளம் வீரர்கள்..., மல்யுத்தத்தில் 3 பதக்கங்களை அள்ளி அசத்தல்!!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் கிரேக்க ரோமன் பிரிவில் இந்தியா வீரர்கள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து 3 வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளனர்.

U 23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்:

ஸ்பெயினில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 17ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஈரான், இந்தியா, ஹங்கேரி, ஜப்பான் போலந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதில், ஆடவருக்கான கிரேக்க ரோமன் 77 கிலோ எடை பிரிவில் இந்தியா சார்பாக பங்குபெற்ற சஜன் பன்வாலா, உக்ரைனின் டிமிட்ரோ வசெட்ஸ்கியை வீழ்த்தினர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதன் மூலம், U23 உலக மல்யுத்தத்தில் முதன் முதலாக பதக்கத்தை (வெண்கலம்) வென்ற இந்தியர் பெருமையை அடைந்திருந்தார். இவரை தொடர்ந்து, 97 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நித்தேஷ், பிரேசிலின் இகோர் பெர்னாண்டோ ஆல்வ்ஸ் டி குயிரோசினை எதிர்கொண்டார். இதில், நித்தேஷ் ஆரம்ப முதல் அபாரமாக செயல்பட்டு 10-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

T20 WC இந்தியா-பாகிஸ்தான் மோதுவதில் சிக்கல்…, ஆசிய கோப்பையால் நிகழ்ந்த விபரீதம்!!

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு 2 வது வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இது போன்ற மற்றொரு ஆட்டத்தில், 72 கிலோ எடை பிரிவில் ஜப்பான் வீரரை எதிர்கொண்ட இந்தியாவின் விகாஸ் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி 6-0 என வெற்றி பெற்றார். இதனால், இந்தியாவுக்கு U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் கிரேக்க ரோமன் பிரிவில் 3 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here