T20 WC இந்தியா-பாகிஸ்தான் மோதுவதில் சிக்கல்…, ஆசிய கோப்பையால் நிகழ்ந்த விபரீதம்!!

0
T20 WC இந்தியா-பாகிஸ்தான் மோதுவதில் சிக்கல்..., ஆசிய கோப்பையால் நிகழ்ந்த விபரீதம்!!
T20 WC இந்தியா-பாகிஸ்தான் மோதுவதில் சிக்கல்..., ஆசிய கோப்பையால் நிகழ்ந்த விபரீதம்!!

ஆசிய கோப்பை தொடர் குறித்த ஜெய் ஷாவின் கருத்தால், டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மோதுவதில் சிக்கல் ஏற்படும் என எச்சரிக்கைகள் வந்துள்ளன.

IND vs PAK:

ஆசிய கோப்பை தொடரின் அடுத்த சீசன் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது, பொதுவான இடத்தில் தான் ஆசிய கோப்பை நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார். இந்த அறிவிப்பு, இரு நாட்டிற்கும் இடையே மேலும் பகையை அதிகப்படுத்தியுள்ளது. இவரது, இந்த கருத்துக்கு பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் யூனுஸ் கான் பதிலடி கொடுத்து இருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, இந்தியா இல்லாமல் கூட ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், பலர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். இந்த எச்சரிக்கைகளுக்கு மேல், பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், விளையாட்டில் அரசியலை திணிக்க கூடாது என்று கூறி, உலக கோப்பைக்கை உலை வைக்கும் அளவுக்கு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

இரும்பு அணியை எதிர்கொள்ளும் மும்பா…!! கபடியில் ஆறுதல் வெற்றி யாருக்கு?? வெளியேறப்போவது யார்??

அதாவது, ஆசிய கோப்பை தொடர் திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடத்தப்பட்ட வேண்டும். அவ்வாறு தவறினால், வரும் 23 ம் தேதி இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடாது என கடுமையாக எச்சரித்துள்ளார். இவரது இந்த கருத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆசிய கோப்பை குறித்த முடிவை கிரிக்கெட் கவுன்சில் விரைவில் எடுக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here