தமிழக சட்டமன்ற தேர்தல் – தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தினகரன்!!

0

அமமுக கட்சியின் தலைவர் தினகரன் தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகள் நலன் பெரும் வகையில் பல திட்டங்கள் இடம்பிடித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தங்களது கட்சியின் வேட்பாளர்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து அமமுக கட்சியும் தனது வேட்பாளர்களை தெரிவித்துள்ளனர். தற்போது அமமுக கட்சியின் தலைவர் தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவர் 63 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் நலம் பெரும் வகையில் 100 திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் சிலவற்றை, அமமுக ஆட்சிக்கு வந்தால் உரம் போன்ற இடுபொருட்கள் மானியத்துடன் விவசாயிகளின் வீடு தேடி வரும். மேலும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,000 மற்றும் கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4,000 குறைந்தபட்சமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது இந்த அறிக்கையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேமுதிக தனித்துப் போட்டி?? அமமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

மேலும் அம்மா புரட்சி திட்டம் என்ற பெயரில் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இனி தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மதுக்கடைகள் அனைத்தும் படிப்படியாக மூடப்படும் என்று தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவர்கள் போல கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதுபோல் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகைகள் அரசு பேருந்துகளில் வழங்கப்படும் என்று மக்களுக்கு பயன்படும் வகையில் பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here