இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது – அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

0

இன்று மற்றும் நாளை வங்கிகள் விடுமுறை மற்றும் வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிருத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் அடுத்த 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.

பொதுத்துறை வங்கி:

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு திட்டங்களை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும் பல அரசு துறைகளை தனியாருக்கு மாற்றும் திட்டங்களை அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். அதில் ஒன்று தான் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயம் ஆகப்போவதாக அறிவிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை வங்கி ஊழியர்கள் அனைவரும் எதிர்த்தனர். மேலும் இதனை திரும்ப பெற கூறி வங்கி ஊழியர்கள் சங்கம் வருகிற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நாடு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இன்று 2வது சனிக்கிழமை மற்றும் நாளை ஞயிற்று கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் வருகிற திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை ஆண்டு வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வங்கிகள் மூடப்படும். எனவே தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளதால் பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளும் கடுமையாக பாதிக்கப்படவுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here