க்ளாப்ஸ் அள்ளும் ‘டெடி’ படத்தின் விமர்சனம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

ஆர்யா மற்றும் சாயீஷா நடிப்பில் உருவான ‘டெடி’ திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது.

டெடி திரைப்படம்

இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் சாயீஷா நடித்துள்ள திரைப்படம் ‘டெடி’. ஆக்சன் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக ‘டெடி’ உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஆர்யா மற்றும் சாயீஷாவுடன் நடிகை சாக்ஷி அகர்வால் மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘இனிய தனிமையே’ என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகி அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘டெடி’ திரைப்படம் இன்று ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளியில் அஸ்வின் எலிமினேஷனா?? கலக்கத்தில் ரசிகர்கள்!!

வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகியுள்ள டெடி திரைப்படம் தற்போது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. இத்திரைப்படத்தில் ஓசிடி என்று சொல்லப்படும் சீக்கிரமாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவராக நடிகர் ஆர்யா நடித்துள்ளார்.

இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் டெடி ஒன்று நடித்துள்ளது. டெடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆர்யா மற்றும் டெடி தோன்றும் காட்சிகள் எல்லாம் குழந்தைகளை எளிதாக கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பின்னணி இசை, ஒளிப்பதிவு, நடிப்பு ஆகியவை பாராட்டும்படி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here