நேருவின் பழங்குடியின மனைவி மரணம்., அரசியல் தலைவர்கள் அஞ்சலி!!

0
நேருவின் பழங்குடியின மனைவி மரணம்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றவர் தான்  ஜவகர்லால் நேரு. இவர் இந்தியாவின் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பழங்குடியின மக்களை சந்திக்க தம்பத் என்ற பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது பழங்குடியின மக்களை கௌரவிக்கும் விதமாக அங்கிருந்த புத்னி என்ற பெண்ணிற்கு மாலை அணிவித்துள்ளார். அதாவது அந்த பழங்குடியின மக்களை பொருத்தவரை ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் கழுத்தில் மாலை போட்டால் அவர் திருமணம் முடிந்ததாக அர்த்தம்.  இதன் காரணமாக பழங்குடியின மக்கள் புத்னியை தங்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதன் பிறகு ஜார்க்கண்ட் பகுதிக்கு இடம்பெயர்ந்த புத்னின் சுத்ரி தத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு காங்கிரஸ் கட்சியினரால் இவருக்கு அரசு வேலையும் கொடுக்கப்பட்டுள்ளது.  இப்படி இருக்கையில் 80 வயதை அடைந்த புத்னி இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  இதையடுத்து அரசியல் தலைவர்கள்,  பொதுமக்கள் புத்னியின் இறப்பிற்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here