எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா இறந்ததை அடுத்து வீட்டில் உள்ள எல்லா பெண்களும் அப்பத்தாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் இதற்கு குணசேகரன் முட்டுக்கட்டையாக இருக்கிறார். இப்படி இருக்கும் நேரத்தில் அப்பத்தா நிச்சயம் உயிருடன் இருக்கிறார் என்ற சந்தேகமும் அனைவரது மத்தியிலும் உள்ளது. இப்படி இருக்கும் சூழலில் அடுத்து வரும் எபிசோடுகளில் அப்பத்தாவை ஜீவானந்தம் தான் காப்பாற்றி கௌதம் பொறுப்பில் ஒப்படைத்திருப்பாராம்.

ஆனால் இப்போது அப்பத்தா உயிருடன் இருக்கும் விஷயத்தை சொன்னால் உடனே குணசேகரன் மீண்டும் அப்பத்தாவை கொலை செய்து விடுவார் என நினைத்து யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருப்பாராம். தக்க சமயத்தில் குணசேகரனுக்கு ஆப்பு வைக்கும் விதமாக அப்பத்தா உயிருடன் இருக்கும் விஷயத்தை ஜீவானந்தம் செல்வாராம். இதை கேட்டு நந்தினி, ஜனனி எல்லோரும் சந்தோஷப்பட குணசேகரன் அதிர்ச்சியாவராம்.