நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசுத் துறைகளுக்கான போட்டி தேர்வு மட்டுமல்லாமல் தனியார் வேலைவாய்ப்பு முகாம், சுயதொழில் கடனுதவி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாதந்தோறும் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருவதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கேற்றாற்போல் கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதத்தில் கூடுதலாக 21,475 பேர் EPFO திட்டத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். மொத்தமாக சுமார் 8.92 லட்சம் புதிய உறுப்பினர்களும், அதில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 58.92 சதவீதம் பேரும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.