சொந்த கார்களை இனி இதற்கு பயன்படுத்தக் கூடாது – போக்குவரத்து ஆணையரின் அதிரடி கட்டளை!

0
சொந்த கார்களை இனி இதற்கு பயன்படுத்தக் கூடாது - போக்குவரத்து ஆணையரின் அதிரடி கட்டளை!

போக்குவரத்து ஆணையர் சொந்த கார்களை வாடகை வாகனமாக பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போக்குவரத்து ஆணையரின் எச்சரிக்கை:

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வாடகை ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து துறை சார்பாக எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் சிலர் தனது சொந்த கார்களை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

மாநாடாக மாறிய விஜயின் படப்பிடிப்பு தளம்.. இணையத்தில் வைரலாகும் ஹாஷ்டாக்!!

இவ்வாறு சொந்த கார்களை வாடகை வாகனங்களாக உபயோகிப்பது தவறு என்று போக்குவரத்து துறை முன்னதாகவே அறிவித்து இருந்து. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு சிலர் சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்துவதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. இப்புகார்கள் மீதான நடவடிக்கையாக போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் சொந்த பயன்பாட்டு கார்களை வாடகை வாகனமாக பயன்படுத்த கூடாது என எச்சரித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here