நாளை முதல் குற்றாலத்தில் பொதுமக்கள் குளிக்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0

இன்று சுற்றுலா தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதை தொடர்ந்து நாளை முதல் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் கீ.சு.சமீரன் அனுமதிவழங்கியுள்ளார்.

சுற்றுலா தலங்களுக்கு அனுமதி:

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 31 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்ட ஊரடங்கியிலும் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. கடந்தமாதம் திரை அரங்குகளை திறக்க அனுமதி வழங்கியது. மேலும் கொடைக்கானல், ஊட்டி , ஏற்காடு, ஏலகிரி போன்ற மலைவாசல் சுற்றுலா தலங்களுக்கு இபாஸ் முறையுடன் அனுமதி அளித்தது. இன்று சென்னையில் உள்ள கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் நீச்சல்குளங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் மக்கள் குளிக்க அனுமதி வழங்குவதாக அம்மாவட்ட ஆட்சியர் கீ.சு.சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு குளிக்க வரும் பயணிகளை தனி தனியே கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்படும். அவர்களின் அறிவுறுத்தலின்படி தான் அவர்கள் செயல்பட வேண்டும்.மேலும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

கர்ப்பமானதை உறுதி செய்ய ஹாஸ்பிடல் செல்லும் தனம் & மூர்த்தி!!

மேலும் 8 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவியில் மக்கள் குளிக்க அனுமதி வழங்கியதால், சுற்றுலா பயணிகள் மற்றும் அங்கு தொழில் செய்யும் சிறு தொழிலாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் இந்த நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிட்டது அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here