டாப் சீரியலுக்கு டாடா சொன்ன 2 முன்னணி நாயகிகள் – திகைப்பில் சேனல் நிர்வாகம்!!

0
டாப் சீரியலுக்கு டாடா சொன்ன 2 முன்னணி நாயகிகள் - திகைப்பில் சேனல் நிர்வாகம்!!
டாப் சீரியலுக்கு டாடா சொன்ன 2 முன்னணி நாயகிகள் - திகைப்பில் சேனல் நிர்வாகம்!!

சின்னத்திரை உலகில் டாப் ஹீரோயின்களாக வலம் வரும் நடிகை கேப்ரியல்லா மற்றும் வினுஷா தேவி இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால், இருவரும் சீரியலில் இருந்து விலகுகிறார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்கள் கேள்வி:

சின்னத்திரை உலகில் டாப் ரேஞ்சில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சுந்தரி மற்றும் பாரதி கண்ணம்மா. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி என்ற தொடரில், கிராமத்து அப்பாவிப் பெண்ணாக சுந்தரி என்ற பாத்திரத்தில் கேப்ரியல்லா  நடித்து வருகிறார். இவரது கணவர் தன்னை கைவிட்ட போதிலும், தனது இலட்சியத்திற்காக கடினமாக உழைத்து வருகிறார்.

அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா என்ற பாத்திரத்தில் வினுஷா தேவி நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது, வினுஷா மற்றும் கேப்ரியல்லா  இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பொதுவாகவே பாரதி கண்ணம்மா ரோஷினி, அகிலன் என பலர் சினிமா வாய்ப்புகள் வந்ததால் சீரியலில் இருந்து விலகினார்கள். இதனால், இவர்களும் இந்த சீரியலில் தொடர்ந்து நடிப்பார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here