உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல் – நிர்மலா சீதாராமன் 41வது இடம்!!

0

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாத இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 41-ம் இடம் பிடித்துள்ளார்.

சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்:

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாத இதழான ஃபோர்ப்ஸ் இதழ், ஒவ்வோரு ஆண்டும் வெவ்வேறு பிரிவுகளில் முதல் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும். 2020-ம் ஆண்டு வெளியிட்டுள்ள பட்டியலில்,தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41-வது இடம் பிடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் அவர் 34 வது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டு வெளியிட்டுள்ள பட்டியலில் 17 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

England Prime Minister - Angela Markel
England Prime Minister – Angela Markel

17 வது வருடமாக ஃபோர்ப்ஸ் பவர் லிஸ்டில் உள்ள பெண்கள் 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள், நான்கு தலைமுறைகளில் பிறந்தவர்கள். இந்த பட்டியலில் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா 55வது இடத்திலும், மஜும்தார்-ஷா 68வது இடத்திலும், லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான ரேணுகா ஜக்தியானி 98வது இடத்திலும் உள்ளனர்.

ஊட்டி மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா?? குழப்பத்தில் பொதுமக்கள்!!

Roshni-Nadar_-Shiv-Nadar
Roshni-Nadar_-Shiv-Nadar

ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலோ மேர்க்கல் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது ஆண்டாக இரண்டாவது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 32 வது இடத்திலும், தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் 37 வது இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here