ஊட்டி மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா?? குழப்பத்தில் பொதுமக்கள் – ரெயில்வே அதிகாரிகள் விளக்கம்!!

0

கூடுதல் கட்டணம், பணிப்பெண்கள் வசதியுடன் ஊட்டி மலை ரெயில் தற்போது இயக்கப்படுகிறது. இதனால் இச்சேவை தனியார் மயமாக்கப்பட்டதாக பொது மக்கள் குற்றம் சாட்டிய நிலையில் இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்:

மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக, மலைப்பாதையில் இந்த ரெயில் செல்லும்போது இயற்கை காட்சிகளை கண்டு மகிழலாம். வளைந்து நெளிந்து செல்லும் இந்த பாதையில் மொத்தம் 208 வளைவுகளும், ஏராளமான பாலங்களும் உள்ளன. அத்துடன் 16 குகைகளும் உள்ளது. இந்த ரெயிலில் பயணிப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிக ஆர்வம் காட்டுவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்பதிவு வசதியுடன் உள்ள இந்த ரெயிலில் பயணிக்க மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பு கட்டணமாக ரூ.600-ம், குன்னூருக்கு ரூ.445-ம், 2-ம் வகுப்பு கட்டணமாக ஊட்டிக்கு ரூ.295-ம், குன்னூருக்கு ரூ.190-ம், முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க ஊட்டிக்கு ரூ.175-ம், குன்னூருக்கு ரூ.110- வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு வசதியுடன் உள்ள இந்த ரெயிலில் பயணிக்க மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பு கட்டணமாக ரூ.600-ம், குன்னூருக்கு ரூ.445-ம், 2-ம் வகுப்பு கட்டணமாக ஊட்டிக்கு ரூ.295-ம், குன்னூருக்கு ரூ.190-ம், முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க ஊட்டிக்கு ரூ.175-ம், குன்னூருக்கு ரூ.110- வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோன நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், சில பேருந்துகள் மற்றும் சில சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது.எனவே ஊட்டி மலை ரெயிலையும் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் டி.என்.43 என்ற தனியார் நிறுவனம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது.

தாராளமாக குறையும் தங்கத்தின் விலை!!

இந்த சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. எப்போதும் உள்ள கட்டணத்தை விட இது பல மடங்கு அதிகமாக உள்ளதால் பொது மக்கள், இதை அனைவரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளதாக குரோதம் சாட்டுகின்றனர். மேலும் தனியாரின் வசம் இந்த சேவையை ஒப்படைத்து உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தங்கள் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறுகின்றனர்.

இது குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது “ஊட்டி மலை ரெயிலை தனியாரிடம் கொடுக்கவில்லை. இந்த சிறப்பு ரெயிலை யார் வேண்டுமானாலும் வாடகைக்கு எடுத்து இயக்கலாம். மேலும் பல முறை தனியார் நிறுவனங்கள் பணம் செலுத்தி சினிமா சூட்டிங்குக்கு எடுத்து உள்ளனர். அதுபோன்று வெளிநாட்டு தேனிலவு தம்பதிகளும் வாடகைக்கு எடுத்து உள்ளனர். இதற்காக ரெயில்வே நிர்வாகத்துக்கு ஒரு நாளுக்கு ரூ.4 லட்சத்து 93 ஆயிரத்து 500 வாடகையாக செலுத்த வேண்டும்.

அவ்வாறு செல்லும் சிறப்பு ரெயிலில் 160 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு மேல் பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது சிறப்பு மலை ரெயில் கடந்த 5-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி வரை மட்டுமே 13 டிரிப் இயக்கிக் கொள்ள தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மலை ரெயிலில் வாடகைக்கு எடுத்திருக்கும் நிறுவனம் அதிக பயணிகளை ஏற்றக் கூடாது இதற்காக அரசு பணியாளர்கள் சோதனை செய்து தான் ரெயிலை இயக்க அனுமதிப்பார். ரெயிலை இயக்குவதும் அரசு ஓட்டுனர்கள் தான்.

தற்போது கொரோனா ஊரடங்கால் மலை ரெயில் இயக்கப்படவில்லை. ஆனால் தற்போது தனியார் மூலம் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கொரோனா பீதி குறைந்து வழக்கம் போல அனைத்து ரெயில்களும் இயக்கப்படும் போது ஊட்டி மலை ரெயிலும் இயக்கப்படும். இது தவிர தனியார் மூலம் இயக்கப்படும் சேவைக்காக மற்றொரு ரெயில் உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் மூலம் மலை ரெயில் இயக்கப்படுவதால் சாதாரண மக்கள் அதில் பயணம் செய்ய முடியாது என்று பொது மக்கள் கவலைப்பட வேண்டாம்.

எனவே வழக்கமான ரெயில் சேவை தொடர்ந்து நடத்தப்படும். இதே போல மலை ரெயிலின் பெயரும் மாற்றப்படவில்லை. ஆனால் மலை ரெயிலில் வைக்கப்பட்ட தனியார் நிறுவன போர்டை அகற்ற சொல்லி உள்ளோம். இனி அந்த போர்டு இருக்காது. இவ்வாறு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here