நிவர் புயல் சேதங்களை சீரமைக்க ரூ.74.24 கோடி – தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!!

0
cmo of tamilnadu
cmo of tamilnadu

நவம்பர் மாதம் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதங்கள் உருவாகி மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதன் அடுத்த கட்டமாக புரெவி புயல் தாக்கி கடலோர மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. அடுத்தடுத்த புயல் காரணமாக ஏற்பட்ட பெரும் சேதங்களை சரி செய்ய பல நாட்களாகும். இந்நிலையில் முதற்கட்டமாக ரூ.74.24கோடி நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

நிவர் புயல் – ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தை கடந்த மாதம் 25ம் தேதி நிவர் புயலும், 30ம் தேதி புரெவி புயலும் தாக்கின. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி இன்னும் நீர் வடியாமல் இருக்கின்றன. மேலும் தாழ்வான பகுதி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் பல லட்சம் மக்கள் குடிக்க தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் மின்சாரம் இல்லாமலும் தவித்து வருகிறார்கள்.

இதனிடையே நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு வந்தார். நேற்று கடலூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீரில் மூழ்கிய பயிர்களை வாங்கி பார்த்தார். மேலும் நிவர் புயல் சேதம் குறித்த அறிக்கை வந்ததும் உரிய நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ஊட்டி மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா?? குழப்பத்தில் பொதுமக்கள்!!

சேதடைந்த பாலங்கள், சாலைகளை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த வீடுகள், நீர்நிலைகள், சாலைகள், மின்கம்பங்களை உள்ளிட்டவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here