இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – டேவிட் வார்னர் விலகல்!!

0

டிசம்பர் 17 ஆம் தேதி துவங்க இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் துவக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் விலகியுள்ளார். காயம் காரணமாக ஏற்கனவே நடந்த போட்டிகளில் இருந்து விலகி இருந்த வார்னர் தற்போது இந்த போட்டிகளால் இருந்தும் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகள்:

கடந்த மாதம் முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகின்றனர். இதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் முதல் போட்டிகள் துவங்கின. முதலில், ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி ஜெயித்தது. பின், இந்திய அணி கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி அடைந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு பின்பு, டி 20 போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்திய அணி அபாரமாக வெளியாகி 2-1 என்ற கணக்கில் வெற்றி அடைந்தது. இந்த போட்டிகளுக்கு பிறகு வரும் 17 ஆம் தேதி ஒரு நாள் போட்டிகள் மீண்டும் நடைபெற உள்ளன. ஏற்கனவே நடந்த முடித்த அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் காயம் காரணமாக போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். தற்போது வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டிகளிலும் விளையாட போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.

கோப்பையை தூக்கி கொடுத்த கோஹ்லி, பாண்ட்யா – யார்க்கர் நடராஜன் நெகிழ்ச்சி!!

அவரது காயம் இன்னும் சரி ஆகாத நிலையில் இவ்வாறாக அறிவித்துள்ளார். ஏற்கனவே நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி தோற்று போனதால் வெற்றி அடைய வேண்டிய நெருக்கடியில் அணி வீரர்கள் உள்ளனர். அதே போல் முக்கிய துவக்க வீரராக கருதப்படும் வார்னர் போட்டிகளில் விளையாடாமல் இருப்பது அணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here