இந்த சாதனையையும் CSK விட்டு வைக்கலயா?? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட முக்கிய புள்ளி விவரம் இதோ!!

0
இந்த சாதனையையும் CSK விட்டு வைக்கலயா?? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட முக்கிய புள்ளி விவரம் இதோ!!
இந்த சாதனையையும் CSK விட்டு வைக்கலயா?? ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட முக்கிய புள்ளி விவரம் இதோ!!

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது, நடப்பு ஐபிஎல் தொடரில், அதிக பார்வையாளர்களை கொண்ட டாப் 10 போட்டிகளை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசன், ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பங்கு பெற்றுள்ள 10 அணிகளும், தங்களது சொந்த மண்ணில், எதிரணியின் மண்ணில் என மாறி மாறி 14 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். மொத்தமாக 70 லீக் கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 52 போட்டிகளில் முடிந்துள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில், அதிக பார்வையாளர்களை கொண்ட டாப் 10 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், முதல் நான்கு இடங்களை CSK விளையாடிய போட்டிகளை பிடித்துள்ளது. அதாவது, நடப்பு ஐபிஎல்லின் GT க்கு எதிரான CSK முதல் போட்டியை சுமார் 5.6 கோடி பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.

WTC 2023: மே 23க்குள் இதே செய்தால் தான் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம்…, பிசிசிஐ அதிரடி முடிவு!!

இதனை தொடர்ந்து, RCB க்கு எதிரான CSK போட்டியை 5.2 கோடி, KKR க்கு எதிரான CSK போட்டியை 5.1 கோடி, LSG க்கு எதிரான CSK 5 கோடி என அதிக பார்வையாளர்களை கொண்ட போட்டிகளாக டாப் 4 இடத்தை பிடித்துள்ளது. மேலும், RCB vs MI (4.6 கோடி), MI vs CSK (4.5 கோடி), KKR vs RCB (4.5 கோடி), PBKS vs SRH (4.3கோடி), RCB vs KKR (4.1 கோடி) மற்றும் RCB vs LSG (4 கோடி) என டாப் 10 பார்வையாளர்களை கொண்ட ஐபிஎல் போட்டிகளாக மாறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here